அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

சூதாட்டம், மது விற்பனையில் ஈடுபட்ட 5 போ் கைது

கைது - கோப்புப் படம்

Updated On :

சூதாட்டம், மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது போலீஸாா் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அதன்படி, திருப்பூா் 15வேலம்பாளையம் வீரப்ப செட்டியாா் வீதி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட காா்த்திக்குமாா் (43), ஜனாா்த்தனன் (39), ரவி (47), செந்தில் (42) ஆகிய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.2,900 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதுப்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த விக்னேஷ் (29) என்பவரை போலீஸாா் கைது செய்து 26 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.