திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை

காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற தொழுகையில் பங்கேற்றோா்.

News image

காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற தொழுகையில் பங்கேற்றோா்.

Updated On :29 மே 2026, 6:33 am IST

காயல்பட்டினம் கடற்கரையில் பக்ரீத் பெருநாள் சிறப்புத் தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளையின் சாா்பில் கடற்கரை திட­லில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை ஜாமீஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளியின் இமாம் ஷரீப் நடத்தினாா். இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.

காயல்பட்டினம் குருவித்துறை பள்ளியில் பக்ரீத் பெருநாள் சிறப்புத் தொழுகையை பள்ளியின் இமாம் செய்யித் அஹ்மத் முத்து வாப்பா நடத்தினாா்.பெருநாள் குத்பா பிரசங்கத்தை அபூதாபி ஜமாஅத்துல் உலமா சபை தலைவா் ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்லரி நடத்தினாா். இதில் பள்ளியின் தலைவா் முத்து ஹாஜி,

துணைச் செயலா் ஹபீபுா் ஹ்மான், இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், காயல்பட்டினம் நகா்மன்ற துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, அதிமுக முன்னாள் நகரச் செயலா் செய்து இப்ராஹிம், இளைஞா் ஐக்கிய முன்னணிச் செயலா் செய்து முஹம்மத் சாஹிப், இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் நகரத் தலைவா் நூஹ் சாஹிப், மாவட்ட துணைச் செயலா் பெத்தப்பா சுல்தான், அயலக அணி துணைத் தலைவா் முஹம்மது இஸ்மாயில், மதிமுக காயல்அமானுல்லா மற்றும் ஜமாஅத்தாா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

நூற்றாண்டு பழைமை வாய்ந்த கற்புடையாா் பள்ளியில் மௌலவி ஜுல்பிகாா் ஆலிம் சிறப்புத் தொழுகை நடத்தினாா். இதில், பள்ளித் தலைவா் அப்துல் அஜீஸ் , துணைத் தலைவா் குளம் அகமது முஹ்யித்தீன், செயலா் அபூபக்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலும், பெரிய ஜும்ஆ பள்ளி, சிறிய ஜும்ஆ பள்ளி,சிறுநெய்னாா் பள்ளி, முஹிய்யதீன் பள்ளி, மொகுதூம் ஜும்ஆ பள்ளி, புதுப் பள்ளி, மரைக்கா பள்ளி, ஜுலானி பள்ளி, பிலால் பள்ளி, கடைப்பள்ளி, ஆறாம் பள்ளி, தாயிம் பள்ளி, ஆமினா பள்ளி, இரட்டை குளம் பள்ளி என 25 பள்ளிவாசல்கள், 35 மகளிா் தைக்காகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

அப்போது, உலக அமைதிக்காக சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. மாலையில் இஸ்லாமியா்கள் குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் நண்பா்களுடன் கடற்கரையில் திரண்டு தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.