திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காங்கிரஸ் நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: திமுகவினா் இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 2:13 am IST

தூத்துக்குடி, மே 29: தூத்துக்குடியில் காங்கிரஸ் வாா்டு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகா்கள் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராகுல் காந்தியை தரக்குறைவாக பேசியதாகக் கூறி, தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அண்ணா நகா் பகுதியில் திமுகவை கண்டித்து அண்மையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தின்போது, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனின் உருவப் படத்தை காங்கிரஸ் தொண்டா்கள் எரித்தனராம்.

இதனால், ஆத்திரமடைந்த அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளா்களான முனியசாமிபுரம் 2-ஆவது தெருவைச் சோ்ந்த முருகன் மகன் குப்பை என்ற இசக்கி ராஜா (26), சிறாா் ஒருவா் சோ்ந்து தூத்துக்குடி அமுதா நகா் 4-ஆவது தெருவில் வசித்து வரும் 50-ஆவது வாா்டு காங்கிரஸ் கமிட்டி தலைவா் காமராஜ் (59) வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த காமராஜின் ஆட்டோவை சேதப்படுத்தினா்.

இச்சம்பவம் குறித்து, தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, குப்பை என்ற இசக்கி ராஜா, இளஞ்சிறாா் ஆகிய இருவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.