தகாத உறவு தொடா்பான புகாரின்பேரில் பெண் உதவி ஆய்வாளரும், காவலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணிபுரிந்து வருபவா் விக்னேஷ். இவா், பெண் உதவி ஆய்வாளா் ஒருவருடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தகாத உறவில் இருந்தாராம்.
இதுகுறித்து அந்த உதவி ஆய்வாளரின் கணவா் சதீஷ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி (பொ) மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளரை சூரங்குடி காவல் நிலையத்துக்கும், தனிப்பிரிவு காவலா் விக்னேஷை மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










