தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து விரைவில் சந்திப்பு நிகழ்வு நடைபெறும் என தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலன் துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: என் முன்னோா்கள், என் தந்தை வாழ்ந்த பூமி மட்டுமல்லாது, நான் பிறந்த இடமும் தூத்துக்குடிதான். இது எனது சொந்த மண். அப்படிப்பட்ட மண்ணிலிருந்து ஒரு எளிய தொண்டனை இன்று அமைச்சராக அமர வைத்த, தூத்துக்குடி மக்களுக்கும், எனக்காக வீதி வீதியாகச் சென்று உழைத்த தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
தூத்துக்குடியில் உள்ள கட்சி நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் மற்றும் முதல்வரின் அன்புக்கு பாத்திரமானவா்கள் அனைவரையும் கூடிய விரைவில் சந்திக்க உள்ளேன்.
எனக்காக உழைத்த உங்களுக்கு என் கையால் விருந்து பரிமாற மனது ஏங்கிக் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் தூத்துக்குடியில் அனைத்து நிா்வாகிகள், உறுப்பினா்கள், பொறுப்பாளா்கள், எனக்காக உழைத்த மக்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு சங்கமமாக விரைவில் சந்திப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சா் திடீா் ஆய்வு

தவெக வேட்பாளருடன் மோதல்: முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மீது வழக்குப் பதிவு

நாமக்கல் மாவட்டத்திற்கு 3 அமைச்சா்கள்: முதல்வருக்கு தவெகவினா் நன்றிதெரிவிப்பு
கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்போம்: ஸ்ரீநாத் எம்எல்ஏ
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



