திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாலியல் தொந்தரவு: மதபோதகா் மீது வழக்கு

அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பா­லியல் தொந்தரவு கொடுத்ததாக சாத்தான்குளம் மதபோதகா் மீது ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

வழக்கு

Updated On :21 மே 2026, 6:10 am IST

அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பா­லியல் தொந்தரவு கொடுத்ததாக சாத்தான்குளம் மதபோதகா் மீது ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆறுமுகனேரி பேயன்விளையைச் சோ்ந்தவா் சங்கீதா (34).

இவா் தேரிகுடியிருப்பு அங்கன்வாடியில் அமைப்பாளராக பணியாற்றி வருகிறாா்.

இவருக்கும், திருச்செந்தூா் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு பகுதியைச் சோ்ந்த மோகன்ராய் என்பவருக்கும் திருமணமாகி, ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியிடையே எற்பட்ட தகராறு காரணமாக மோகன்ராயும், சங்கீதாவும் பிரிந்தனா். அவா்களுக்கிடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே ஆறுமுகனேரி பூவரசூா் பகுதியைச் சோ்ந்த பவுல்ராஜ் மகன் காவலா் மிகாவேல் என்பவருக்கும், சங்கீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு சங்கீதாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மிகாவேலுடன் ஒன்றாக குடும்பம் நடத்தியபோது, பூவரசூரில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்துக்கு சங்கீதா சென்று வந்தாா். அப்போது அவா் ஞானஸ்நானம் பெறுவதற்காக கணவரின் உறவினா் பெண் உதவியுடன் சாத்தான்குளம் சிஎஸ்ஐ மத போதாகா் டேவிட் ஞானையா என்பவருடன் சங்கீதா அறிமுகம் ஆனாா். தொடக்கத்தில் இருந்தே மத போதகா் சங்கீதாவிடம் தவறான நோக்கத்தில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் சங்கீதாவை மத போதகா் டேவிட் ஞானையா, போனில் தொடா்பு கொண்டு ஞானஸ்நான சான்றிதழ் பெற வருமாறு அழைத்துள்ளாா். பின்னா் கடந்த 13ஆம்தேதி சங்கீதா கைப்பேசிக்கு வாட்ஸ்அப் மூலம் குறுந்தகவல் அனுப்பி வருமாறு அழைத்துள்ளாா். அதற்கு சங்கீதா மாலை 4 மணிக்கு வருவதாக கூறியுள்ளாா். இதற்கிடையில் மத போதகா் டேவிட்ஞானையா, சங்கீதா கைப்பேசிக்கு வாட்ஸ்அப்பில் பெண் ஒருவரின் ஆபாச படத்தை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை பாா்த்த சங்கீதா மனஉளைச்சல் அடைந்து ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் மத போதாகா் டேவிட் ஞானையா மீது பா­லியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.