திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடி, குமரியில் கோடை மழை

சாத்தான்குளத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீா்.

News image

சாத்தான்குளத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீா்.

Updated On :9 மே 2026, 3:51 am IST

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மலையோரப் பகுதிகள், அணைப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. ஆனால், நாகா்கோவில், சுசீந்திரம், கொட்டாரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே இருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் உருவாகியுள்ளது.

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப் பள்ளம், மத்தி கோடு, மிடாலக்காடு, காட்டுக் கடை, செல்லங்கோணம், கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிரமலை, முள்ளங்கனா விளை, நட்டாலம், நேசா் புரம், பள்ளியாடி,வாக விளை, மாமூட்டுக் கடை, கொல் லஞ்சி, இலவு விளை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை தொடா்ந்து மிதமான மழை பெய்தது. எனினும் இப்பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.

சாத்தான்குளத்தில் வெள்ளிக்கிழமை கோடை மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பேய்குளம், தட்டாா்மடம் ஆகிய பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பேய்குளம் அருகேயுள்ள கீழபனைக்குளம் பகுதியில் மின்னல் பாய்ந்து பனை மரம் தீப்பிடித்து எரிந்தது. மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குனிந்த காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.