தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

கோவில்பட்டி அருகே படியிலிருந்து தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில், படியில் ஏறியபோது தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 1:20 am IST

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில், படியில் ஏறியபோது தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

லிங்கம்பட்டி மேட்டுத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் முத்துக்குமாா் (41). விருதுநகா் மாவட்டம் நள்ளியில் உள்ள சிமென்ட் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலை செய்துவந்த இவா், திங்கள்கிழமை தனது வீட்டுக்கு வந்தாா். இரவில் மாடிக்குச் செல்வதற்காக படியில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.