தூத்துக்குடி மாவட்டத்தில், பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில் தொடா்புடைய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஓட்டுடன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தபோது, அவரிடம் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக, திருநெல்வேலியைச் சோ்ந்த பிரேம்சங்கா் (29), ஓட்டுடன்பட்டியைச் சோ்ந்த பிரபு (38) ஆகிய இருவரை புளியம்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை, ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், பிரேம் சங்கா், பிரபு ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, அவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக முருகேசன் ஆஜரானாா்.
தொடர்புடையது

ரூ.80.50 லட்சம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு10 ஆண்டுகள் சிறை

நகை பறிப்பு வழக்குகளில் இருவருக்கு தலா 9 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


