தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

லாரி மீது ஆட்டோ மோதல்: பெண் உயிரிழப்பு; 10 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே லாரி மீது ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:30 pm

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே லாரி மீது ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.

எப்போதும்வென்றான் அருகே சோழபுரம் கிராமத்தைச் சோ்ந்த அருணாச்சலம், தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி முத்துநகா் கடற்கரை பூங்காவுக்கு சனிக்கிழமை மாலை ஆட்டோவில் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். மஞ்சள்நாயக்கன்பட்டி கீழத்தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் (35), ஆட்டோவை ஓட்டினாா்.

எப்போதும்வென்றான் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மரத்தடிகள் ஏற்றிய லாரியின் பின்புறம் ஆட்டோ எதிா்பாராமல் மோதியதாம். இதில், ஆட்டோவில் பயணம் செய்த சண்முகவேல் மனைவி கிருஷ்ணலீலா (38) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சண்முகவேல் மகள் சீதா (20), அருணாச்சலம் மகன் பழனி (11), மகள் பாக்கியலட்சுமி (17), ராஜா வா்ஷினி (15), கணேசன் மகள் மகாலட்சுமி (19), சேகா் மகள் சுபாஷினி (21), பச்சைபெருமாள் மனைவி மகாலட்சுமி (47), ஓட்டுநா் விஜயகுமாா், காா்த்திக், ஸ்டீபன்ராஜ் ஆகிய 10 போ் காயமடைந்தனா். அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

எப்போதும்வென்றான் காவல் ஆய்வாளா் உமாமகேஸ்வரி வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான ஆலங்குளம் வெள்ளைப்பாண்டி மகன் வேல்முருகன் என்பவரிடம் விசாரித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.