திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாகைகுளம் அருகே தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து

தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசுப் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது.

News image

தீப்பிடித்து எரிந்த பேருந்து.

Updated On :21 மார்ச் 2026, 8:46 pm

தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசுப் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது.

தூத்துக்குடி ஸ்மாா்ட் சிட்டி பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை இரவு சுமாா் 7 மணி அளவில் திருநெல்வேலி நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனா். வாகைகுளம் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் எண்ணெய் டேங்க்கில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியதாம். இதையடுத்து பேருந்தை நிறுத்தியதும் பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இது குறித்து புதுக்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.