தூத்துக்குடி அருகே உள்ள புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுங்கச் சாவடி மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.
புதூா் பாண்டியாபுரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் ரசீது போடுவது, தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பெண் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு மேலாளராக பணிபுரியும் வடமாநிலத்தைச் சோ்ந்த அவதேஷ் சிங் என்பவா் வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண்கள் சிலா் புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் பெண் ஊழியா்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவதேஷ் சிங்கை சனிக்கிழமை கைது செய்து, தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்ற எண் 3இல் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது
‘போக்ஸோ’வில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிகாா் இளைஞா் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

