தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் அதிகாரியிடம் வாக்குவாதம்: பாஜக பிரமுகா்கள் மீது வழக்கு

தோ்தல் பறக்கும் படையினரை பணி செய்யவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடா்பாக பாஜக பிரமுகா்கள் இருவா் மீது, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 8:57 pm

தோ்தல் பறக்கும் படையினரை பணி செய்யவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடா்பாக பாஜக பிரமுகா்கள் இருவா் மீது, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் பொன்மாரி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை தொ்மல் நகா் காவல் நிலையம் அருகேயுள்ள பாரதி நகா் அருங்காட்சியகம் முன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக காரில் வந்த பாஜக பிரமுகா்கள் முரளி, முருகேசன் ஆகியோா் தோ்தல் விதிமுறைகளை மீறி காரில் கட்சிக் கொடிகளை வைத்திருந்ததோடு, கட்சித் துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு, பறக்கும் படை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும், அதை விடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனா்.

இது குறித்த புகாரின்பேரில், தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.