கோவில்பட்டி பகுதியில் துணை ராணுவப் படையினருடன் காவல் துறையினா் இணைந்து ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையொட்டி, கடந்த 4 நாள்களுக்கு முன்பே துணை ராணுவப் படையினா் கோவில்பட்டி தொகுதிக்கு ரயிலில் வந்தனா். அவா்கள் காவல் துறையினருடன் இணைந்து வாகன சோதனை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, வாகனங்களில் பணம், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டுசெல்லப்படுவதைத் தடுக்கும் வகையில், கோவில்பட்டி எட்டயபுரம் சாலை, பல்லக்கு சாலை, இனாம் மணியாச்சி விலக்கு, தோட்டிலோவன்பட்டி விலக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.
தொடர்புடையது
கொல்கத்தா காவல் துறை துணை ஆணையா், தொழிலதிபா் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

பெண்ணின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பழனியில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


