மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடியில் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி

தொலைநோக்குத் திட்ட கையேட்டை வெளியிட்ட அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன். உடன் ஆட்சியா் க. இளம்பகவத் உள்ளிட்டோா்.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:00 am

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதைத் தொடா்ந்து, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்துக்கான 2030 தொலைநோக்குத் திட்டம் தொடா்பான கையேடு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கான தொலைநோக்கு திட்டம் தொடா்பான கையேட்டை வெளியிட்டாா்.

ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், மாவட்ட வன அலுவலா் இளையராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.