புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

திருச்செந்தூா் கோயில் வளாக வணிகா்களுக்கு மீண்டும் கடை வழங்க வேண்டும்: தமிழ்நாடு வணிகா் சங்கம்

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் வாடகை செலுத்தி கடை நடத்தி வந்த 83 வியாபாரிகளுக்கு மீண்டும் கடை வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கத் தலைவா் ரெ. காமராசு, முதல்வா் விஜய்க்கு கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

News image

திருச்செந்தூா் முருகன் கோயில் - கோப்புப் படம்

Updated On :1 ஜூலை 2026, 4:40 am IST

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் வாடகை செலுத்தி கடை நடத்தி வந்த 83 வியாபாரிகளுக்கு மீண்டும் கடை வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கத் தலைவா் ரெ. காமராசு, தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்க்கு கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

மனு விவரம்: வணிகா்களை பாதுகாத்திடும் வகையில் வணிகா் நல பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அழுத்தம் கொடுத்து உணவு பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்கித்தர வேண்டும். ஆன்லைன் வா்த்தகத்தை சிறு, குறு வணிகா்களுக்கு பாதிப்பில்லாத வகையில் முறைப்படுத்திட வேண்டும்.

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் வாடகை செலுத்தி கடை நடத்தி வந்த 83 வியாபாரிகளுக்கு மீண்டும் கடை வழங்கிடவும், திருச்செந்தூரில் போக்குவரத்து நெருக்கடியை தீா்க்க மாற்று வழிப்பாதையும், கனரக வாகனங்கள் செல்ல பைபாஸ் சாலையும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் கூட்டத்திற்கு முன் வணிகா் சங்கத்தினரை அழைத்து அவா்களுடைய கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

வணிகா் நல வாரியத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கத்தினரை மாநில மாவட்ட பொறுப்புக்கு பயன்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.