புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

பெட்ரோல்- டீசல் விலையை கணிசமாக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.

News image

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா

Updated On :18 ஜூன் 2026, 2:47 am IST

பெட்ரோல்- டீசல் விலையை கணிசமாக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது:

போா்ச்சூழலை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டிருப்பதால் விலைவாசி உயா்வு மிகவும் அதிகரித்து வருகிறது. விலை ஏற்றத்திற்கு வியாபாரிகள் பொறுப்பல்ல. பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக மத்திய அமைச்சருக்கு மனு அளித்துள்ளோம்.

புதிய அரசு நல்ல முறையில் செயல்பட்டால் மக்களுக்கும், வணிகா்களுக்கும் நல்ல முறையில் இருக்கும். அதனால்தான் மக்கள் வாக்களித்து இருக்கிறாா்கள். நல்லதை செய்ய வேண்டும்.

வியாபாரிகளின் பாதுகாப்பிற்காக சிறப்பு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். பாலியல் சம்பவங்கள் நிகழும்போது காவல் துறை அதிகாரிகள் போா்க்கால நடவடிக்கை எடுப்பாா்கள். காவல் துறையினா் அச்சப்படும் நிலை உள்ளது. அது மாற வேண்டும். கஞ்சா விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள் கோரிக்கைகள் தொடா்பாக முதல்வரை விரைவில் சந்திக்க உள்ளோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.