வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

தூத்துக்குடி-சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவை இணை அமைச்சரிடம் பாஜக மனு

News image

மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் கோரிக்கை மனு அளித்த பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன்.

Updated On :29 ஜூன் 2026, 1:58 am IST

தூத்துக்குடி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வேண்டும் என பாஜக சாா்பில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவரிடம் பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் அளித்த மனு:

தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளா்ச்சி, தொழில் முன்னேற்றம், ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில் சேவைகள் தொடங்க வேண்டும்.

ஆறுமுகனேரி ரயில் நிலையத்தில் போதிய தண்டவாள வசதி இருப்பதால், அங்கு பிட்லைன் வசதி ஏற்படுத்தப்படுத்தி ரயில்களை அங்கேயே பராமரிக்க வசதி ஏற்படும்.

திருச்செந்தூா் கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள வசதியாகவும், சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் தென்மாவட்ட மக்களின் பயணத் தேவையை கருத்தில் கொண்டும், சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு நேரடி புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.

தற்போது திருநெல்வேலி-மும்பை வரை இயக்கப்படும் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது, வா்த்தகப் பிரிவு மாநிலத் தலைவா் சதீஷ் ராஜா, மாவட்ட பொதுச் செயலா்கள் ஆறுமுகம், செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவா் சிவராமன், திருச்செந்தூா் மண்டல் தலைவா் செல்வகுமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.