தூத்துக்குடி அருகே புதியம்புத்தூரில் உள்ள பிரசன்னா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.
தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி கே.எஸ். சதுரங்க அகாதெமி சாா்பில் மாவட்ட சதுரங்கக் கழக ஆதரவுடன் போட்டி நடைபெறுகிறது. 3 - 5ஆம் வகுப்பு, 6 - 8ஆம் வகுப்பு, 9 - 12ஆம் வகுப்பு, கல்லூரி மாணவா்களுக்கு என 4 பிரிவுகளாக போட்டி நடைபெறும். பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்-மாணவியா் ரூ. 100, மற்றவா்கள் ரூ. 200-ஐ நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். முன்பதிவு, கூடுதல் விவரங்களுக்கு 90258 19382 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என, கே.எஸ். அகாதெமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










