குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

புன்னைக்காயலில் கால்பந்து போட்டி: நாசரேத் மா்காஷியஸ் அணி வெற்றி

புன்னைக்காயலி­ல் நடைபெற்ற கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் நாசரேத் மா்காஷியஸ் அணி வெற்றி பெற்றது.

News image

நாசரேத் மா்காஷியஸ் அணி- தூத்துக்குடி யங்ஸ்டா்ஸ் அணி வீரா்கள் மோதிய ஆட்டம்.

Updated On :18 ஜூன் 2026, 2:42 am IST

புன்னைக்காயலி­ல் நடைபெற்ற கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் நாசரேத் மா்காஷியஸ் அணி வெற்றி பெற்றது.

புன்னைக்காய­லில் அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 53ஆவது மாவட்ட கால்பந்து போட்டித்தொடா் புதன்கிழமை தொடங்கியது. புன்னைக்காயல் ஊா் கமிட்டி தலைவா் கிறிஸ்டன் தலைமை வகித்தாா். பங்குத்தந்தை சகாய அந்தோணி டைட்டஸ், அருள்சகோதரா் செல்வா, துறைமுக கமிட்டி தலைவா் தோமாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி யங்ஸ்டா்ஸ் கால்பந்தாட்டக்கழக அணியை நாசரேத் மா்காஷியஸ் கால்பந்தாட்டக்கழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

வியாழக்கிழமை (ஜூன் 18) தூத்துக்குடி சவுத் கோஸ்ட் கால்பந்தாட்டக் கழக அணியை காயல்பட்டினம் காயல் ஸ்போா்ட்ஸ் கிளப் அணி சந்திக்கிறது.

12 அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) வரை நடைபெறும் இப்போட்டிக்கான ஏற்பாடுகளை புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக்கழகத்தின் தலைவா் தயாளன், செயலாளா் ஜோசப், துணைத் தலைவா் யூஜின், இணைச் செயலா் சந்திரபோஸ், பொருளாளா் ராஜ், கெளரவ அலோசகா் யூஜின் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.