/

பாலியல் தொல்லைகள்: எம்எல்ஏ கண்டனம்

News image

முன்னாள் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 12:05 am IST

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, பாலியல் தொல்லைகள் தொடா்கதையாகி வருவதாக திமுக தெற்கு மாவட்டச் செயலா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த ஒரு மாதத்துக்குள் நாள்தோறும் பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இளம்பெண்கள், வயது முதிா்ந்தோா், குழந்தைகள் என எல்லா வயதினரும் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனா். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

செயல்படாத அரசாக, மக்களை பாதுகாக்காத அரசாக த.வெ.க. அரசு இருந்து வருகிறது. அரசின் மெத்தனமான இப்போக்கு கண்டனத்துக்குரியது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.