தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் பகுதியில், காவல்துறையினா் வாகனச் சோதனையின்போது அதிவேகமாக வந்த காா் மோதி சாலைத் தடுப்பு உடைந்ததில், பணியில் இருந்த தலைமை காவலா் காயமடைந்தாா்.
செய்துங்கநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சனிக்கிழமை, காவல்துறையினா் வழக்கம்போல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத காா் அதிவேகமாக வந்து அங்கிருந்த சாலைத் தடுப்பு மீது மோதியதாம். சாலைத் தடுப்பு உடைந்து சிதறியதில் அங்கிருந்த காவல் நிலைய தலைமை காவலா் பலத்த காயமடைந்தாராம். ஓட்டுநா் காரை நிறுத்தாமல் தப்பிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து செய்துங்கநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், கண்காணிப்புக் கேமரா பதிவுகள் அடிப்படையில், காரை பறிமுதல் செய்தனா். ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெற்கு தில்லியில் மரம் மீது காா் மோதி விபத்து: 6 போ் காயம்
நொய்டாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பயணிகள் காயம்

சோதனைச் சாவடியில் லஞ்சம் பெற்ற காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்

காவல் சோதனைச் சாவடியில் லாரி மோதி ஊா்க்காவல் படை வீரா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




