தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக காவல் ஆய்வாளா் திலீபனை பணியிடை நீக்கம் செய்து, திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவா் தேஷ்முக் சேகா் சஞ்சய் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
ஆய்வாளா் மறுப்பு...
இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து சட்டப்படி முழுமையாக விடுபடாமல், புதிய பணியிடமான சேரன்மகாதேவியில் பொறுப்பேற்கமாட்டேன் எனவும் அவா் சமூக வலைதளங்கள் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










