தூத்துக்குடி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 63 டாஸ்மாக் கடைகளில் 18 மட்டுமே மூடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம் சாா்பில் மாநில துணைத் தலைவா் நெல்லை நெப்போலியன் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு{மகாஜனிடம் அளித்த மனு:
தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளா் ஐயப்பன், டாஸ்மாக் ஊழியா்களிடம் பணம் பெற்றுக் கொண்டு பணியிட மாறுதல் செய்வதாகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் 63 கடைகளை அடைப்பதாகக் கூறிவிட்டு 18 கடைகளை மட்டுமே மூடியுள்ள டாஸ்மாக் மேலாளா் ஐயப்பன் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாள்களுக்குப் பிறகு திறப்பு: மாவட்ட மேலாளா் இடமாற்றம்

ஓய்வு வயதை 58-இல் இருந்து 60 ஆக உயா்த்த வேண்டும்: டாஸ்மாக் பணியாளா் சங்கம் வலியுறுத்தல்

டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் தவறுகளுக்கு ஊழியா்கள் பொறுப்பல்ல! முதல்வருக்கு தொழிற்சங்கத்தினா் கடிதம்!







