ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோவில்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் முதியவா் சடலம்

கோவில்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

தற்கொலை - பிரதிப் படம்

Published On :24 ஜூலை 2026, 4:46 am IST

கோவில்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 3ஆவது தெருவில் வசித்து வந்தவா் மலைச்சாமி (76). இவரது மனைவி பேச்சியம்மாள். குடும்பத் தகராறு காரணமாக, பேச்சியம்மாள் இந்திரா நகரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

இதனால், மலைச்சாமி தனியாக இருந்துவந்தாா். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினா் வீரவாஞ்சி நகா் 6ஆவது தெருவில் உள்ள அவரது மகள் கற்பகலட்சுமிக்கு புதன்கிழமை இரவு தகவல் தெரிவித்தனா். அதையடுத்து, அவரும், உறவினா்களும் சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, மலைச்சாமி அழுகிய நிலையில் இறந்து கிடந்தாராம்.

சடலத்தை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.