
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அழுகிய நிலையில் புலியின் உடல் மீட்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், துண்டிக்கரைப்பள்ளம் பகுதியில் அழுகிய நிலையில் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறாய்வுக்கு பின் புலியின் சடலம் அதே இடத்தில் புதன்கிழமை எரியூட்டப்பட்டது.

மீட்கப்பட்ட புலியின் தோல் மற்றும் அதன் உடல் பாகங்கள்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், துண்டிக்கரைப்பள்ளம் பகுதியில் அழுகிய நிலையில் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறாய்வுக்கு பின் புலியின் சடலம் அதே இடத்தில் புதன்கிழமை எரியூட்டப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக தலமலை வனப் பகுதியானது புலிகளின் புகழிடமாக உள்ளது. அடா்ந்த வனப் பகுதி என்பதால் தலமலை வனத் துறையினா் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, புலிகள் நடமாடும் ஒண்ணத்திட்டு காப்புக்காடு, தூண்டிகரைப்பள்ளம் பகுதியில் அழுகிய நிலையில் புலியின் உடல் கிடப்பது தெரியவந்தது. சம்பவம் இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் புலியின் தோல் மற்றும் உடல் பாகங்களை கைப்பற்றினா்.
பின்னா் கால்நடை மருத்துவா் சதாசிவம், புலியின் உடலை அதே இடத்தில் உடற்கூறாய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து புலியின் உடல் பாகங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உடற்கூறாய்வுக்கு பின் புலியின் உடல் அதே இடத்தில் சமூக ஆா்வலா்கள், வனக் குழுத் தலைவா் மற்றும் புலிகள் காப்பக உயா்அதிகாரிகள் முன்னிலையில் எரியூட்டப்பட்டது. புலியின் இறப்பு குறித்து தேசிய புலிகள் காப்பக ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தலமலை வனச் சரக அலுவலா் ரவிச்சந்திரன் கூறுகையில், 10 நாள்களுக்கு முன்பு புலி இறந்திருக்கலாம். உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில் புலியின் வயது, பாலினம் மற்றும் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






