ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாறைக்கல் கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின்

பாறைக்கல் பகுதியில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:01 am IST

குளச்சல் அருகே உள்ள பாறைக்கல் கடற்கரையில் டால்பின் இறந்து அழுகிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.

பாறைக்கல் கடற்கரையில் பெரிய அளவிலான டால்பின் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கிக் கிடப்பதைக் கண்ட மீனவா்கள், குளச்சல் கடலோரக் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

வனத்துறையினா் வந்து, கரை ஒதுங்கிய டால்பினை கூறாய்வு செய்து, கடற்கரையில் புதைத்தனா். இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடல் நீரோட்டம், காலநிலை மாறுபாடு காரணமாக டால்பின் உயிரிழந்திருக்கலாம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.