ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

பிரதிப் படம்

Published On :13 ஜூலை 2026, 1:31 am IST

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூா் கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதந்துள்ளது. இதுகுறித்து சிறுவங்கூா் கிராம நிா்வாக அலுவலா் பழனிவேல் அளித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் கிணற்றில் இருந்து சடலத்தை தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் மீட்டனா்.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவா் சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட செம்பராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மா.சுரேஷ் (36) எனத் தெரிய வந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை உடல்கூறாய்வுக்காக போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.