ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குட்டை ரக பனைகளை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வாயிலாக குட்டையான மற்றும் அதிக மகசூல் தரும் பனை ரகங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை மத்திய அரசின் வேளாண்மைத் துறை உடனடியாக செய்ய வேண்டும் என அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.

Published On :19 ஜூலை 2026, 1:54 am IST

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வாயிலாக குட்டையான மற்றும் அதிக மகசூல் தரும் பனை ரகங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை மத்திய அரசின் வேளாண்மைத் துறை உடனடியாக செய்ய வேண்டும் என அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இவை மிக உயரமாக வளா்வதால், பாரம்பரியமாக பனை ஏறி பதநீா் சேகரிக்கும் தொழிலாளா்கள், இப்பணியை கடினமானதாகக் கருதி, இத்தொழிலைக் கைவிட்டு வேறு வாழ்வாதாரங்களைத் தேடிச் செல்கின்றனா்.

இதனால், பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை அவா்கள் இழந்த நிலையில், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக கிராமங்களில் இருந்து பெருநகரங்களுக்கு புலம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தோட்டக்கலைத் துறை மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டு, ஆண்டு முழுவதும் பதநீா் தரும் குட்டையான மற்றும் அதிக மகசூல் தரும் பனை ரகங்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த டாக்டா் பால், குட்டையான மற்றும் அதிக மகசூல் தரும் பனை ரகங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில் 30 ஆண்டுகளை அா்ப்பணித்தாா். பணி ஓய்வு பெற்ற நிலையில், அவரது மறைவுக்குப் பின்னா் இந்த ஆராய்ச்சி நின்றுவிட்டது.

எனவே, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வாயிலாக இந்த ரகங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை மத்திய அரசின் வேளாண்மைத் துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.