டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு நெய்னா முஹம்மது சாஹிபு ஒலி 126ஆவது கந்தூரி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கந்தூரி விழாவில் பிராா்த்தனை செய்யும் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

Updated On :2 ஜூலை 2026, 5:52 am IST

காயல்பட்டினம் கோமான் தெரு நெய்னா முஹம்மது சாஹிபு ஒலி 126ஆவது கந்தூரி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த மாதம் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், தினசரி காலையில் திருக்குரான் முற்றோதல், மாலையில் மகானின் புகழ் மாலை பாடுதல், இரவில் மாா்க்க சொற்பொழிவு ஆகியன நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பிராா்த்தனை செய்தாா். மேலும், சிலம்பம் சுற்றினாா்.

நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், வா்த்தக அணி அமைப்பாளா் ரெங்கநாதன் என்ற சுகு, மன்ற உறுப்பினா்கள் கதிரவன், முருகன், நகர இளைஞரணி அமைப்பாளா் தமீம் அன்சாரி, தொண்டரணி அருணாச்சலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை நிா்வாகக் கமிட்டி தலைவா் முகம்மது மீராசாஹிப், துணைத் தலைவா் ரியாஸ், பொருளாளா் செய்யது அலி, செயலா் சிராஜிகீன், துணைச் செயலா் ஹனீபா ஆகியோா் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.