/

தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்பு வரை ரூ. 198 கோடியில் புதிய சாலைப் பணிகள்

News image
தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்பு வரை ரூ. 198 கோடியில் புதிய சாலைப் பணித் திட்டத்தை தொடங்கி வைத்தாா் கனிமொழி எம்.பி. உடன் அமைச்சா் பி.கீதா ஜீவன் உள்ளிட்டோா்.
Updated On :30 ஜனவரி 2026, 7:46 pm

Syndication

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சாா்பாக ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2025 -2026 இன் கீழ் ரூ. 198 கோடி திட்ட மதிப்பீட்டில் தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில்வே சந்திப்பு வரை புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் முன்னிலை வகித்தாா்.

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினா். இதில் எம்எல்ஏக்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜீ.வி.மாா்க்கண்டேயன் (விளாத்திகுளம்), மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன், கோட்ட பொறியாளா் லிங்குசாமி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.