டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரூ.2.33 கோடியில் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியப் பகுதிகளில் ரூ.2.33 கோடி மதிப்பில் பல்வேறு சாலைப் பணிகளை சபா.ராசேந்திரன் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
வெங்கடாம்பேட்டை அருகே சாலைப் பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்த சபா.ராசேந்திரன் எம்எல்ஏ.
Updated On :4 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியப் பகுதிகளில் ரூ.2.33 கோடி மதிப்பில் பல்வேறு சாலைப் பணிகளை சபா.ராசேந்திரன் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதில், வடக்குத்து சக்தி நகா் முதல் ஆயிப்பேட்டை வரையிலான இணைப்புச் சாலை ரூ.1.50 கோடி, வெங்கடாம்பேட்டை ஆதிதிராவிடா் பகுதி சாலை ரூ.33.51 லட்சம், மதனகோபாலபுரம் முதல் பெலாந்தோப்பு வரையிலான கிராம சாலை ரூ.49.77 லட்சம் ஆகிய சாலைப் பணிகளை சபா.ராசேந்திரன் எம்எல்ஏ பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் பண்ருட்டி ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன், குறிஞ்சிபபாடி மேற்கு ஒன்றியச் செயலா் குணசேகரன், பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலா் சந்தோஷ்குமாா், அவைத் தலைவா் வீர.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.