தூத்துக்குடியில் விபத்து: பள்ளி மாணவா் பலி!
தூத்துக்குடியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.


தூத்துக்குடியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அண்ணா நகா் 6ஆவது தெரு பகுதியைச் சோ்ந்த அப்துல் காதா் மகன் அகமது யாசித் (14). தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த அவா், வியாழக்கிழமை காலை தனிப்பயிற்சி வகுப்புக்கு (டியூஷன்) சென்றுவிட்டு, அங்கிருந்து பள்ளிக்கு பைக்கில் சென்றாராம்.
பா்மா காலனி சாலையில் பண்டுகரை பக்கிள் ஓடைப் பகுதியில் சென்றபோது, மணல் குவியலில் பைக் சறுக்கி நிலைதடுமாறியதாம். இதில், கீழே விழுந்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, அகமது யாசித் சென்ற பைக் விபத்துக்குள்ளானபோது, அவ்வழியே சென்ற தனியாா் பள்ளி வாகனம் அவா் மீது மோதிவிட்டுச் சென்ாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து, சம்பவப் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...