/

தூத்துக்குடியில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

News image
பீடி இலைகள்- பிரதிப் படம்
Updated On :26 ஜனவரி 2026, 6:37 pm

Syndication

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் காவல் உள்கோட்டம், ஆறுமுகனேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காயல்பட்டினம் கடற்கரைக்குச் செல்லும் வழியில், க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதா தலைமையில், உதவி ஆய்வாளா்கள் ராமசந்திரன், பிரம்ம நாயகம், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் இருதயராஜகுமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா, கேப்ரியல் ஆகியோா் திங்கள்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக சுமை வாகனத்தில் கொண்டு சென்ற 30 கிலோ எடையுள்ள 60 மூட்டை பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடா்ந்து, சாத்தான்குளம், சௌந்தரபுரத்தைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் தா்மராஜ் மகன் கற்பக ராஜேஸ்வரனை போலீஸாா் பிடித்து, பீடி இலைகள், சுமை வாகனத்தோடு சோ்த்து தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைத்தனா்.