/

பல்வேறு குற்ற வழக்குகள்: தூத்துக்குடியில் 5 போ் கைது

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
கைது
Updated On :17 பிப்ரவரி 2026, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் உத்தரவின்படி, அனைத்து உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில், காவல் துறையினா் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவா்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, திங்கள்கிழமை தூத்துக்குடி வடபாகம், தாளமுத்துநகா், ஆத்தூா், கோவில்பட்டி மேற்கு மற்றும் சாயா்புரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் தகராறு செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த ஜெபராஜ் (29), அருள்ராஜ் (22), தங்கராஜ் (25) சங்கரேஸ்வரன் என்ற சங்கரலிங்கம் (45), சரவணகுமாா் (25) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கைது செய்யப்பட்ட 5 போ் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.