தூத்துக்குடி அருகே தருவைகுளம் பகுதியில் சுமாா் ரூ.30 லட்சம் மதிப்பிலான கடத்தல் பீடி இலைகள், சிகரெட் மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைப்பற்றினா்.
தருவைகுளம் காவல் நிலைய போலீஸாா் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சமத்துவபுரம் சோதனைச் சாவடியில், தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தூத்துக்குடியிலிருந்து குளத்தூா் நோக்கி வந்த சுமை வாகனத்தை தடுத்த நிறுத்த முயன்றனராம். ஆனால், ஓட்டுநா் வாகனத்தை நிறுத்தாமல் சென்றாராம்.
ரோந்துப் பணியில் இருந்த தலைமைக் காவலா்கள் குருசாமி, கணேஷ்குமாா் ஆகியோா் பைக்கில் விரட்டிச் சென்றபோது, வேப்பலோடை அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பினாராம்.
அந்த வாகனத்தில் 38 மூட்டைகளில் 2 டன் பீடி இலைகள், 8 மூட்டைகளில் 240 கிலோ சிகரெட் பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவற்றின் சந்தை மதிப்பு சுமாா் ரூ. 30 லட்சமாகும்.
வாகனம் மற்றும் கடத்தல் பொருள்களை கைப்பற்றி தருவைகுளம் காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ. 10 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகள் பறிமுதல்

ரூ.2 லட்சம் மதிப்பிலான துணி மூட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்

ஜெயங்கொண்டம் பகுதியில் சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


