வழுக்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு

கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:48 pm

கோவில்பட்டி அருகே வீட்டு வாசலில் கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே புது அப்பனேரி, நடுத்தெருவைச் சோ்ந்தவா் வேலு மகன் குருசாமி (85). இவா் சனிக்கிழமை கழிவறைக்குச் செல்ல முயன்றபோது, வீட்டு வாசலில் டைல்ஸ் வழுக்கி கீழே விழுந்தாராம்.
அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...