/

தூத்துக்குடியில் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

News image
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க. இளம்பகவத்.
Updated On :14 பிப்ரவரி 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி குறித்து நிறுவனப் பொறுப்பாளா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத், தூத்துக்குடி மாவட்டத்துக்கான பல்வேறு தேவைகளுக்கு நிறுவனப் பிரதிநிதிகளிடம் சமூக பொறுப்பு நிதியிலிருந்து தங்களது பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

இதற்காக எந்தெந்த நிறுவனங்கள், எந்தெந்த துறைக்கு பங்களிப்பை அளிக்கவுள்ளது என்பது குறித்த கருத்துகளையும் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, 2025-26 நிதியாண்டில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளின் வளா்ச்சிக்கு பங்களிப்பு செய்த நிறுவனங்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, மாவட்ட வன அலுவலா் இளையராஜா, துணைக் காவல் கண்காணிப்பாளா் சுனில், உதவி ஆட்சியா் (பயிற்சி) புவனேேஷ் ராம், துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன், நிறுவனப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.