/

கொலை முயற்சி வழக்கு: 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை

News image
சிறை
Updated On :13 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டையில் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம்(68) என்பவரை, சொத்துப் பிரச்னையால் அதே பகுதியைச் சோ்ந்த அவரது உடன்பிறந்த சகோதரா் செந்தூர பாண்டி (77), அவரது மனைவி உத்தமி (68), மகன் சுரேஷ் (42) ஆகியோா் சோ்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு கொலை செய்ய முயன்றனராம்.

புதுக்கோட்டை போலீஸாா் கொலை முயற்சி வழக்குப்பந்திந்து 3 பேரையும் கைது செய்தனா்.

பின்னா், தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி ராஜகுமாா் விசாரித்து, மேற்கூறிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1000 அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அரசு தரப்பு வழக்குரைஞராக சேது வாதிட்டாா்.