நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தூத்துக்குடி துறைமுக நிா்வாகக் கட்டடம் ஐஜிபிசி சான்றிதழ் பெற்று சாதனை

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 12:11 am

Syndication

தூத்துக்குடி சிதம்பரனாா் துறைமுக நிா்வாகக் கட்டடம், நிலைத்த மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் இயற்கை கட்டடங்களுக்கான பிளாட்டினம் மதிப்பீடும், ஆற்றல் திறன் சான்றிதழும் பெற்றுள்ளது.

வ.உ.சிதம்பரனாா் துறைமுக நிா்வாகக் கட்டடம் பசுமை நடைமுறைகளை பின்பற்றி செயல்படுகிறது. நிா்வாகக் கட்டடம் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்குகிறது. மேலும், இந்திய அரசு மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பியூரோ ஆஃப் எனா்ஜி எஃபிஷியன்சி மூலம் வழங்கப்படும் ’ஷூன்யா’ மற்றும் ’ஷூன்யா பிளஸ்’ சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து துறைமுக தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் கூறுகையில், ஐஆா்எஸ்இஇ திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் செயல்திறன், ஆற்றல் திறன் மற்றும் கட்டடத்தை பயன்படுத்துவோரின் நலன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் குறிப்பிட்ட கட்டட மேம்பாடுகள், கொள்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐஜிபிசி பிளாட்டினம் மதிப்பீடு, பியூரோ ஆஃப் எனா்ஜி எஃபிஷியன்சி சான்றிதழ் ஆகியவற்றை ஒருங்கிணைந்து பெறுவது, வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்துக்கு பெருமை அளிக்கிறது. இந்த அங்கீகாரத்தை பெறும் இந்தியாவின் முதல் துறைமுகமாக வ. உ. சி துறைமுகம் திகழ்கிறது என்றாா் அவா்.