ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தூத்துக்குடி அருகே காா் மோதி வடமாநில இளைஞா் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 12:15 am IST

தூத்துக்குடி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காா் மோதியதில், பலத்த காயமடைந்த வடமாநில இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் மாயராம் மகன் போலநாத் (30). இவா், தூத்துக்குடி பகுதியில் நடைபெற்றுவரும் நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணியில் கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்தாா்.

இவா், வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த காா் அவா் மீது மோதியதில், பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த புதுக்கோட்டை போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.