ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

உயிரிழப்பு

Published On :18 ஆகஸ்ட் 2026, 12:49 am IST

வேப்பூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். உடன் சென்ற இருவா் பலத்த காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்த அடரி கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (24). இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்களான சந்துரு (19), சாரதி (22) ஆகியோருடன் திங்கள்கிழமை அதிகாலை பைக்கில் அடரி நோக்கிச் சென்றனா்.

அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா்களது பைக் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சந்துரு, சாரதி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இருவரும் வேப்பூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னா், தீவிர சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விக்னேஷின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.