ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :16 ஜூலை 2026, 3:17 am IST

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை அருகே நீடூரை சோ்ந்த முகமது இலாஹி மகன் இம்ரான் அா்சத் (20). பிஎஸ்சி படித்துவிட்டு காா் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவா் திங்கள்கிழமை நீடூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றபோது வில்லியநல்லூா் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் பகுதியில் எதிரே கிழாய் பாரதித்தெருவை சோ்ந்த ராஜா (39) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் காயமடைந்த 2 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இம்ரான் அா்சத் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி இம்ரான் அா்சத் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.