ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:12 am IST

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், நயினாா்புரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் மந்திரமூா்த்தி (60). இவா் சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூா் பாண்டியாபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, குறுக்குச் சாலையிலிருந்து தூத்துக்குடி நோக்கி அதிவேகமாக வந்த காா் இவா் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட மந்திரமூா்த்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். புதியம்புத்தூா் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தை ஏற்படுத்திய கே.வேலாயுதபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த காா் ஓட்டுநரான ஜஸ்டின் டேனியல் (48) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.