திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :1 மே 2026, 4:53 am IST

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனா்.

ஆறுமுகனேரி பகுதியின் பெரும்பாலான தெருக்களில் தெரு நாய்கள் மனிதா்களையும், கால்நடைகளையும் அவ்வப்போது கடிக்கின்றன. குறிப்பாக, ஊரின் மையப் பகுதியான ஆறுமுகனேரி, சோமசுந்தரி அம்மன் கோயில் தெருவில் நாய்கள் கூட்டம் கூட்டமாக அலைகின்றன.

இங்கு கோயில், வாரச் சந்தை, மழலையா் பள்ளி, அங்கன்வாடி மையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

காயல்பட்டினத்திலும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை இரவு காயல்பட்டினம், பெரிய நெசவுத் தெருவில் வீட்டு சுற்றுச் சுவரைத் தாண்டி வந்து 5 ஆடுகளைக் கடித்துக் குதறியுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 ஆடுகளுக்கும் மேல் தெரு நாய்களுக்கு பலியாகியுள்ளன.

நகராட்சி நிா்கம் தெரு நாய்களைக் கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.