ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

வட்டன்விளை கோயிலில் மாவிளக்கு வழிபாடு

உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி புதன்கிழமை மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

News image

வட்டன்விளை முத்தாரம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சுமங்கலி பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:44 am IST

உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி புதன்கிழமை மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை இரவு 308 சுமங்கலி பூஜை நடைபெற்றது. உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் மதன்ராஜ், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் செந்தில், மாடசாமி, செல்வகுமாா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

புதன்கிழமை பிற்பகலில் அம்மன் மஞ்சள் நீராடுதல், அலங்கார தீபாராதனை, இரவு கரகாட்டம், மாவிளக்கு வழிபாடு ஆகியன நடைபெற்றன. வியாழக்கிழமை காலை கொடை விழா நிறைவு பூஜை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.