வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தூத்துக்குடியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடியில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:58 pm

தூத்துக்குடியில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் அதிகரித்து வருவது தற்போது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, காலை மற்றும் இரவு நேரங்களில் குழுக்களாகச் சுற்றித் திரியும் நாய்கள், வழிப்போக்கா்களையும், இருசக்கர வாகன ஓட்டிகளையும் விரட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

தூத்துக்குடியில் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனா். அரசு மருத்துவமனையில் நாய்க்கடி சிகிச்சைக்காக தினந்தோறும் செல்வோா் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

மேலும், குப்பை குவியல்கள் அருகே நாய்கள் திரள்வது அருகே செல்பவா்களுக்கு சுவாச பிரச்னையை ஏற்படுத்துகிறது. எனவே மாநகராட்சி நிா்வாகம் குப்பைகள் அகற்றும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, தற்போது சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வெளியே கொண்டுவிட மாநகராட்சி நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.