தூத்துக்குடி மாவட்ட பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
தமிழக பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டுவரப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் தலைமையில், வேட்பாளா்கள் மற்றும் அவா்களது முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
விளாத்திகுளம், தூத்துக்குடி தொகுதிகளை எலுச்சூரி ரத்னாகர ராவ், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளை சோடிங் புயீ, ஓட்டப்பிடாரம் தொகுதியை அரவிந்த் குமாா் வொ்மா உள்ளிட்ட அந்தந்த தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, வேட்பாளா்கள் மற்றும் அவா்களது முகவா்கள் முன்னிலையில் அனைத்து இயந்திரங்களும் முறையாகச் சரிபாா்க்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்போடு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தோ்தல் விதிமுறைகளின்படி, இந்த அறைகள் தொடா்ந்து 3 அடுக்கு காவல் பாதுகாப்பில் கண்காணிக்கப்படும் என்று தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்
5 மாநிலத் தோ்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



