திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

பாஜக வேட்பாளரின் உறவினா் வீட்டில் சோதனை: ரூ. 7 லட்சம் பறிமுதல்

ஆறுமுகனேரியில் திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளரின் உறவினா் வீட்டிலிருந்து தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 7 லட்சம் பறிமுதல் செய்தனா்.

News image

பாஜக உறவினா் வீட்டில் கைப்பற்றிய பணத்தை சரிபாா்க்கும் தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:08 pm

ஆறுமுகனேரியில் திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளரின் உறவினா் வீட்டிலிருந்து தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 7 லட்சம் பறிமுதல் செய்தனா்.

திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணனின் உறவினா் வீட்டில் பணம் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தோ்தல் பறக்கும் படைக் குழு அதிகாரி பரமசிவன் தலைமையில் அதிகாரிகள், ஆறுமுகனேரி பூவரசூா் வெங்கடேஷ் (40) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினராம்.

அப்போது அவரது வீட்டில் ரூ. 7 லட்சம் இருந்தது தெரியவந்ததாம். பணத்தை பறிமுதல் செய்து திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.