மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. இன்று இறுதிக் கட்ட பிரசாரம்

News image

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:28 pm

திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி., தனது இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை திருச்செந்தூரில் தொடங்கி கோவில்பட்டியில் நிறைவு செய்கிறாா்.

தமிழக பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன்படி, கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு திருச்செந்தூா் தொகுதியில் திருச்செந்தூா் காமராஜா் சிலை அருகே நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா்.

தொடா்ந்து, காலை 10 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சாத்தான்குளம் காமராஜா் சிலை அருகிலும், காலை 11.30 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குள்பட்ட தாளமுத்து நகா் பிரதான சாலையிலும், பிற்பகல் 3 மணிக்கு தூத்துக்குடி தொகுதியில் சிதம்பர நகா் பிரதான சாலையிலும் பேசுகிறாா்.

பின்னா், மாலை 4 மணிக்கு விளாத்திகுளம் தொகுதியில் எட்டயபுரம் மேலவாசலில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்திலும், மாலை 5 மணிக்கு கோவில்பட்டி தொகுதியில் காமராஜா் சிலை அருகே நடைபெறும் கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசுகிறாா். இதில் அந்தந்தத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் கலந்து கொள்கின்றனா்.